2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று (UPDATE)

J.A. George   / 2020 மார்ச் 17 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

7.46PM: மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ்தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவது தொடர்பிலான தேசிய மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

இன்றை நாளில் மாத்திரம் 15 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஆறு பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X