2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய சகல  மாவட்டங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16 ஆம் திகதி காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. . குறித்த பகுதிகளில்  அன்றைய தினம் காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பி.ப 4.00 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. 

மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏப்ரல் 14 ஆம் திகதி ஊரங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது  அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு, அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.


கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இக் கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X