2025 மே 15, வியாழக்கிழமை

எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

Editorial   / 2020 மார்ச் 24 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல்  குறித்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடரங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

மேலும், அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, 8 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு நேற்று 2 மணியுடன் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

மேலும், அந்த மாவட்டங்களில் அன்றைய தினம் மீண்டும் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், ஏனைய மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .