Freelancer / 2025 ஜூன் 30 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாயாகும்.
மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாயாகும்.
இந்நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய, எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. R
12 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago