Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 11 , மு.ப. 09:09 - 1 - {{hitsCtrl.values.hits}}
சின்னசாமி ஷிவானி
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானம், எரிபொருட்களுக்கான விலையை, நேற்று (10) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது, விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் இடம்பெறவில்லை எனவும் விலைகளில் சீர்திருத்தங்கள் சில மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியாலளர் சந்திப்பின் போது, அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறினார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானம், அண்மைக்காலமாக நட்டத்தில் இயங்கிவரும் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய, அதற்கான காரணங்களை ஆராய்ந்த பின்னரே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதென, அவர் கூறினார்.
இதற்கமைய, புதிய விலைத் திருத்தமானது, ஒக்டேன் 92 ரகப் பெற்றோல் - 137 ரூபாயாகவும் ஒக்டேன் 92 ரகப் பெற்றோல் 148 ரூபாயாகவும், ஓட்டோ டீசல் - 109 ரூபாயாகவும், சுப்பர் டீசல் - 119 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் - 101 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எரிபொருளுக்கான விலையைஅதிகரிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இது கடந்த காலங்களில் காணப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில், அப்போதைய விலையதிகரிப்புக்கு நிகராக இல்லையெனவும், அதனை விடக் குறைந்த அளவிலேயே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சர்வதேசச் சந்தையில் காணப்பட்ட எரிபொருள் விலையேற்றத்துக்கமைய, இலங்கையில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படாமையால், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதமொன்றுக்கு 20 மில்லியன் ரூபாயை நட்டமாக அடைந்து வந்ததெனக் குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, இவ்வாறானதொரு நிலையிலேயே, விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கான சாதகமான காரணிகளை ஆராய்ந்து, நட்டமடைந்த தொகையை ஈடுசெய்யும் வகையில், இப்புதிய விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதெனவும் குறிப்பிட்டார்.
“எரிபொருளின் விலையை அதிகரிக்க, புதிய விலைச் சூத்திரம் அறிமுகம் செய்யாதது ஏன்? இனிவரும் காலங்களில், எரிபொருளுக்கான விலைச் சூத்திரம் அதிகரிக்கப்படுமா?” என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “விலைச் சூத்திரத்தை உடனடியாக அறிமுகம் செய்தால், அது மக்களுக்கு பல்வேறு ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எரிபொருள் விலை அதிகரிக்கின்ற போது, போக்குவரத்து, மின்னுற்பத்தி, உற்பத்தித் தொழிற்றுறை ஆகியவற்றிலும் அது தாக்கம் செலுத்தும். எனவே, இத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்டே, இத்திருத்தம் அமைந்துள்ளது” என்றார்.
அண்மைக் காலங்களில், எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துக் காணப்பட்டது. பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து வாகனங்களுக்குப் பயன்படுத்தி வந்தமையே, இதற்குப் பிரதான காரணமெனக் கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இத்தகைய செயற்பாட்டைக் குறைக்கும் நோக்கில், டீசலுக்கு நிகரான விலையில், மண்ணெண்ணெயின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கமைய, மண்ணெண்ணெயின் புதிய விலை, 57 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Suyethan Saturday, 12 May 2018 05:32 PM
நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் இறைத்து விவசாயம் செய்பவர்களுக்கும், மின்சாரம் இல்லாத வீடுகளில் வசிப்பவர்களுக்கும், சிறு கைத்தொழிலாலர்களுக்கும் இந்த மண்ணெண்ணெய் விலையேற்றம் தாங்கமுடியாத விலையேற்றமாகும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025