2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏப்ரல் 30க்கு முன்னர் கட்சி மறுசீரமைப்பு; ரணில் உறுதி

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெறுமென கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொறுப்பு மற்றும் கலந்துரையாடலின் அடிப்படையில் புதிய குழுவொன்றை நியமித்து தேவையான மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கட்சியின் புதிய உறுப்பினர்களை ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் நியமிப்பதற்காக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 8, 9ஆம் திகதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X