2025 மே 17, சனிக்கிழமை

‘ ஐ.நா துணைக்குழுவுக்கு இராணுவ முகாம்களுக்கு செல்ல அனுமதி’

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

இலங்கையை வந்தடைந்துள்ள சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் துணைக்குழுவுக்கு, நாட்டின் எந்தவோர் இராணுவ முகாம்குள்ளும் சென்று, விசாரணைகளை மேற்கொள்ள இடமளிப்போமென இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

நான்கு பேர் கொண்ட குறித்த குழு, நேற்று(02) இலங்கையை வந்துடைந்துள்ள நிலையில், 12ஆம் திகதிவரையில் நாட்டில் தங்கியிருந்து பல்வேறான சந்திப்புகளை  மேற்கொள்ள உள்ளது.

​அக்குழு, இராணுவ முகாம்களுக்குள்ளும் சென்று விசாரணைகளை மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, “இக்குழு இலங்கைக்கு வருவது இதுவே முதற்தடவை ”என்றார்.

ஐ.நா குழுவுக்கு இலங்கையின் இராணுவ முகாம்களுக்குள் சென்று விசாரணைகளை மேற்கொள்ள கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட  அவர், சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நாவின் துணைக்குழுவையும், இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பதற்கு இராணுவம் தயாராக இருக்கிறது என்றார்.

இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து விசாரணைகளை ​மேற்கொள்வதற்கு சட்டரீதியாக அதிகாரம் இல்லை எனத் தெரிவித்த  அவர், எனினும்,  விசாரணைகளை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்படுமாக இருந்தால் குறித்த குழுவை அழைத்துசென்று காண்பிப்பதில் இராணுவத்துக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை என்றார்.

மால்டோவா குடியரசைச் சேர்ந்த விக்டர் ஜாஹாரியா இந்தக் குழுவில்,  சத்யபோஹோஷ் குப்த டோம்மா (மொரிஷியஸ்), பெட்ரோஸ் மைக்கேல்ட்ஸ் (சைப்ரஸ்), ஜூன் லோபஸ் (பிலிப்பைன்ஸ்) ஆகியோர் அடங்குகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .