2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடுகின்றது

J.A. George   / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (10) கூடவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிற்பகல் 04 மணிக்கு  கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழு கூடவுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கூட்டணியின் பொதுச்செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு இன்றைய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கடந்த 30ஆம் திகதி இறுதியாக கூடியிருந்தது. 

அதனையடுத்து, 06ஆம் திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், பின்னர் இரத்துச்செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .