2025 மே 17, சனிக்கிழமை

‘ ஒன்று திரளவும்’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குத் தேவையான விரிவான தேசிய சக்தியை உருவாக்குவதற்கு நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்று திரள வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்து உருவாக்கப்படவுள்ள தேசியக் கூட்டமைப்புக்கு, அடுத்த தேர்தல்களின் போது, ஜனாதிபதி அல்லது பிரதம வேட்பாளர்கள் யாரென்பது பிரச்சினையாக இருக்கக்கூடாது. என்ன நோக்கத்துக்காக, அடுத்த அரசாங்கம் உருவாக்கப்படவேண்டுமென்பது தொடர்பில் சிந்தியுங்களெனக் கேட்டுக்கொண்டார்.  

மக்கள் ஐக்கிய முன்னணியின் 22 ஆவது மாநாடு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு-புதிய நகர மண்டபத்தில் நேற்று (17) நடைபெற்றது. அதில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ​அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“நாம் ​​தேடும் எதிர்காலத்துக்கான புதிய அரசாங்கத்துக்கு புதிய வேலைத்திட்டம்” எனும் தொனிப்பொருளிலான யோசனைகள் அடங்கிய ஆவணத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, அந்த யோசனைகள், அதிலிருப்பதைப்போலவே அமுல்படுத்தப்படல் வேண்டுமென்பது தன்னுடைய எதிர்பார்ப்பாகும் என்றுக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, அந்த யோசனைகளுக்கு தன்னுடைய இணக்கத்தையும் தெரிவித்தார்.  

 ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துபவர் ரணில் விக்கிரமசிங்க அல்லவெனத் தெரிவித்த அவர், அந்த நிலைமைக்கு முகம்கொடுப்பது எவ்வாறென்பது தொடர்பில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் முழுமையான தேசிய கூட்டமைப்பொன்று அவசியத்தையும், ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.  

 இந்த மாநாட்டில் உரையாற்றுவது போல, புதிய தேசியக் கூட்டமைப்பு, புதிய உத்வேகத்துடன், அடுத்த தேர்தல்களுக்கு முகம்கொடுக்கும் வகையில், அமைக்கப்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, மக்கள் சக்தியுடன் அந்தக் கூட்டமைப்பை வழிநடத்தவேண்டும் என்றார். 

நாட்டின் எதிர்காலத்துக்காக புதிய அரசாங்கமொன்றையும் புதிய வேலைத்திட்டமொன்றையும் புதிய தேசிய சக்தியொன்றையும் உருவாக்குவதற்கு முற்போக்காளர்களும் தேசப்பற்றுடையவர்களும் பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்தார்.

இந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் அந்த அரசாங்கத்தை பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்காது, நாட்டை நேசிக்கின்ற, நாட்டினுள் காணப்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து எதிர்கால சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு தகுந்த அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைவரும் தத்தமது மனச்சாட்சியிடம் கேள்வியெழுப்ப வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருப்பதை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அவ்வாறான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாதென்றார்.

“நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதுடன், நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கும் நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .