2025 மே 15, வியாழக்கிழமை

கருவுடன் சந்திப்பு

Editorial   / 2019 ஜூன் 18 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில், இன்று (18) பிற்பகல் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தெரிவுக்குழுவின் முன்னிலையில் அரசாங்க அதிகாரிகள் அழைக்கப்படுகின்றமை, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேட தெரிவுக்குழுவை கலைக்குமாறு கடுமையாக எச்சரித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமல் புறக்கணித்திருந்தார். இந்நிலையிலேயே, சபாநாயகருடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .