Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 29 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்படியும் குழந்தை சுர்ஜித் காப்பாற்றப்பட்டுவிடுவான் என்ற எண்ணத்தில், ஆசையில், விருப்பத்தில்தான் இலட்சக்கணக்கான தமிழக மக்கள் நேற்றிரவு தூங்கச் சென்றிருப்பார்கள்.
எத்தனையோ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று நாட்கள் தாண்டியும் நம்பிக்கையை சற்றும் தளராமல்தான் எல்லோரும் இருந்தார்கள்.
ஒக்டோபர் 25 ஆம் திகதி மாலை 5.40 மணியளவில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது என்ற செய்தி வெளியான தருணத்தில் பலரும் அதிர்ந்து போனார்கள்.
குழந்தை இன்று மீட்கப்பட்டுவிடுமா? நாளை மீட்கப்பட்டு விடுமா என ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஏங்கினார்கள்.
குழந்தை சுஜித்திற்காக உலகத்தின் மூளை முடுக்கெடுல்லாம் சாதி, மதங்களை கடந்து பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. நேற்று இரவு வரை கூட பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
அடுத்தடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே இருந்ததால் நம்பிக்கையை கொஞ்சமும் குறைய விடாமல் இருந்தார்கள். பிரமிக்கும் வகையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் கூட நம்பிக்கை அதிகமாக இருந்தது.
ஆனால், எல்லா நம்பிக்கையும் தற்போது சிதைந்துவிட்டது. எல்லா பிரார்த்தையும் பலன் அளிக்காமல் போய்விட்டது. 80 மணி நேர போராட்டமும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.
எப்படியும் குழந்தை சுஜித் மீண்டு வந்துவிடுவான் என ஏங்கிய எல்லோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த 80 மணி நேரத்தில் குழந்தையை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கானோரின் உழைப்புகள் இருந்தது.
அவர்களும் குழந்தையை எப்படியும் மீட்டுவிடலாம் என ஆசையுடன் தீவிரமாக பணியாற்றினார்கள். ஆனால், அவர்களுக்கும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
தமிழக மக்கள் மத்தியில் குழந்தை சுஜித்தின் மரணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இந்த மரணம் மக்கள் மனங்களில் இருந்து நீங்க நீண்ட நாட்கள் ஆகும்.
இந்த அனுபவத்தில் இருந்தாவது உரிய படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
49 minute ago