Editorial / 2024 செப்டெம்பர் 11 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்ய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 2024 பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு கடந்த 7 மாத காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த பிணை உத்தரவு புதன்கிழமை (11)நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
18 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
51 minute ago
1 hours ago