2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சின்னத் தேர்தலுக்கு நிதி கேட்டு கடிதம்

Freelancer   / 2023 மார்ச் 12 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு, ஞாயிற்றுக்கிழமை (12) தெரிவித்தது.

தேர்தலுக்கு பணம் வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆணைக்குழு அனுப்பிய கடிதத்தை, நிதி அமைச்சரின் அனுமதிக்காக அமைச்சின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பணத்தை விடுவித்துக்கொள்ள தனது அனுமதி போதுமானதாக இல்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை விடுவிப்பதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் அங்கிகாரம் தேவையென நிதி அமைச்சின் செயலாளர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கப்படாமையால், 2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த  உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அந்தத் தேர்தலை நடத்துவதற்கு  ஏப்ரல் 25ம் ஆம் திகதி நாள் குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து நிறுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சர் சார்பில் நிதியமைச்சின் செயலாளருக்கும், சட்டமா அதிபருக்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த போது தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X