2025 மே 14, புதன்கிழமை

சுர்ஜித்திடம் எந்த அசைவும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தை சுர்ஜித்திடம் இருந்து எந்த அசைவையும் கேட்கமுடியவில்லை என்று தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 63 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது  ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. 

குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகத் திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று (27) காலை முதல் இயந்திரங்கள் செயல்பட்டாலும், பாறைகள் குறுக்கீடு, மழை போன்ற காரணங்களால் தோண்டும் பணி காலதாமதமாகி வருகிறது. குழி தோண்டும் பணியை தொடக்கம் முதலே அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு வருகிறார். 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு இங்கு பாறைகள் உள்ளன. இரண்டு ரிக் இயந்திரங்கள் கொண்டு வந்தும் அவற்றால் குழி தோண்ட முடியவில்லை. பாறைகள் அவ்வளவு கடினமாக உள்ளன. 

உள்ளே செல்ல செல்ல பாறைகளே இருக்கின்றன. 40 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதற்கு மேல் செல்ல முடியவில்லை. குழந்தை சுர்ஜித்திடம் இருந்து மூச்சு விடும் சத்தம் கேட்கவில்லை

எந்த அசைவும் இல்லை. நம்பிக்கையின் பேரில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுது முடிவு எடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .