2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’சுவிஸ் தூதரக சம்பவம் நடைபெறாத ஒன்று'

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவமானது நடக்காத ஒன்று என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவமொன்று இடம்பெறவில்லை என்பது, விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் அலைபேசி தரவுகளின் ஊடாகவும் அவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றிருக்கவில்லையென தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தனது ஊழியர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணையொன்று கோரிக்கை விடுக்கும் பொறுப்பு குறித்த  தூதரகத்துக்கு இருந்தது. பிரதமர் விசாரணைகளுக்கு உத்தரவிட்டார். தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊழியரின் ஒத்துழைப்பு தேவை” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X