2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு சென்ற பஸ்கள் விபத்து: ஒருவர் பலி; 29 பேர் காயம்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோன வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நபர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் நோக்கி சுமார் 100 நபர்களை ஏற்றிச்சென்ற மூன்று பஸ்களில், இரண்டு பஸ்கள் கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 26 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துசெல்லப்பட்டவர்கள் என்றும் ஏனைய மூவரும் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தினை அடுத்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துசெல்லப்பட்ட மூவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களில் இருவர் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X