Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 14 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரடுமுல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொரடுமுல்லை-பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கருகில், இன்று காலை (14) 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வந்த இருவரே, சரமாரியாக அங்கிருந்த மூவர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், குறித்த வீட்டுக்கு எதிர்பக்கமாக வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸின் உரிமையாளரும், அவரது மகனின் நண்பரும் உயிரிழந்துள்ளனர். பஸ் உரிமையாளரின் மகன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருதரப்புக்கிடையில் நிலவிவந்தமோதலே, இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமென, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதுடன், ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கையில், மொரடுமுல்லை பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனரென, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025