Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய புலனாய்வுச் சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பணிப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தேசிய புலனாய்வுச் சேவையின் பிரதானியாக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த பிரிகேடியர் துவான் சுரேஷ், 1992 ஆண்டு இராணுவ புலனாய்வு பிரிவில் இணைந்துகொண்டார்.
1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை இராணுவ புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தமிழீழ விடுதலை புலிகளில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள 2006ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்தார்.
2009ஆம் ஆண்டுவரை அங்கு தங்கியிருந்ததுடன், 2009ஆம் ஆண்டு இராணுவ வெளிநாட்டு புலனாய்வு பிரிவு அவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 2012ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
29 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
49 minute ago