2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ஆதரிப்போம்’

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்டத்தை மீறி செயற்பட முடியாதென்பதால் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய அரசாங்கம் செயற்படுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவையாவன,

பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கபடுமே தவிர, அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய தீர்மானங்கள் எடுக்கப்படாதென, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு செல்ல தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தால் அதற்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் முன்னெடுக்கபடும் ஆட்சி சிறந்ததால் தேர்தல் அவசியமில்லையென பலரும் கருத்துத் தெரிவிப்பதாகவும் யார் என்ன கூறினாலும் தேர்தல் சட்டத்தை மீறி செயற்பட முடியாதென்பதால் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய அரசாங்கம் செயற்படுமென்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X