Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 11 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாயாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளன.
விலைக்குறைப்பிற்கமைய 138 ரூபாயாகவிருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் 136 ரூபாயாகவும், 164 ரூபாயாகவிருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் 159 ரூபாயாகவும், 136 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சுப்பர் டீசல் 131 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளன.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருள் விலை குறைப்புக்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 3 ரூபாயாலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 144 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 162 ரூபாயாகவும், சுப்பர் டீசல் 131 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago