2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

J.A. George   / 2021 ஜூன் 10 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,910 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் ஒரேநாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இந்த அறிக்கையின் பிரகாரம், மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 19 கொரோனா மரணங்களும், ஜூன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை 48 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

நேற்று (09) உறுதி செய்யப்பட்ட கொவிட் 19 மரணங்களில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X