2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நாளை காலை அமைச்சரவை மாற்றம்

Editorial   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும், காலை 9.30 அளவில் அமைச்சர்களை முன்னிலையாகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் நாளைய தினம் இடம்பெறுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் மனோ கணேசன் இந்த விடயத்தை தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி காலை புதிய அமைச்சரவை நியமிப்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தம்புள்ளை ஸ்ரீ வலகம்பா மகா விகாரையில், கடந்த 27ஆம் திகதி, நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் வெளியிடுகையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, அமைச்சரவை மறுசீரமைப்புத் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

பொதுநலவாய அரசத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி, கடந்த 23ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில் மே முதலாம் திகதிக்கு முன்னதாக புதிய அமைச்சரவை பெயரிடப்படுமென அரசாங்கத் தரப்பு நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து கடந்த 12ஆம் திகதி தற்காலிகமாக நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் பெற்றனர்.

எனினும் முழுமையான அமைச்சரவை மறுசீரமைப்பு, தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னரே இடம்பெறுமென ஜனாதிபதி செயலம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நாளை தினம் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .