Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
J.A. George / 2021 ஜனவரி 15 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை நாளை (16) அதிகாலை 05 மணி முதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை இன்று(15) வெளியிட்டுள்ளது.
எஹலியகொட, பாணந்துறை மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளின் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தனிமைப்படுத்தல் நாளை முதல் தளர்த்தப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எஹலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள மின்னான கிராம உத்தியோகத்தர் பிரிவு, போபத்எல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, விலேகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு, அஸ்கங்குல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ககுதாகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியவை விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன், பாணந்துறை பொலிஸ் பிரிவில் 675 தொடவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவில், மிக்கொன கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மக்கோன மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன விடுவிக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago