2025 மே 14, புதன்கிழமை

பகிரங்க விவாதத்துக்கு வருமாறு கோட்டாவுக்கு சஜித் சவால்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பார்க்கக்கூடியவாறு தொலைக்காட்சியில் நேரடி விவாதமொன்றுக்கு வருமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச  சவால் விடுத்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச, இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

வாக்காளர்களுக்கு மத்தியில்,  தமது கொள்ளை மற்றும் எதிர்கால பார்வை தொடர்பில்  இருவரும் பகிரங்கமாக கருத்துகளை வெளியிட முடியும் என,  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வலுவான வேட்பாளர் ஒருவர், தனது எதிரணியில் உள்ளவருடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு அச்சமயைக்கூடாது எனவும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச  குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .