Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 10 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தமது பணிப்புறக்கணிப்பு தொடரும் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தாம் பதவியிலிருந்து விலகியவர்களாக கருதப்பட்டாலும் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடப் போவதில்லை என்றும் புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பணிபுறக்கணிப்பானது கடந்த 4 நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது 8 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், எனினும் இன்று மாலையிலிருந்து இது நான்காக குறைக்கப்படும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புகையிரத சேவைகள் விசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதுடன்,பணிக்கு திரும்பாத பணியாளர்கள் தத்தமது பதவியிலிருந்து விலகியதாகக் கருதப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா நேற்று)9) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago