2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பிரதமரின் அழைப்பினை நிராகரித்தது ஜே.வி.பி

Editorial   / 2020 மே 01 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலைக்கப்பட்ட 08ஆவது நாடாளுமன்றில் உறுப்பினர்களாக செயற்பட்ட 225 பேரையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்.

எதிர்வரும் நான்காம் திகதி முற்பகல் 10 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும், இந்தக் கலந்துரையாடலில் தான் உள்ளிட்ட தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க மாட்டார்கள் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.

இக்கட்டான இந்த சூழ்நிலையை சமாளிக்க நாடாளுமன்றம் கூட்டப்பட்ட வேண்டும் அல்லது தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் கேட்கப்பட வேண்டும் என்று அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X