2025 மே 14, புதன்கிழமை

புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (01) கைச்சாத்திடப்படவுள்ளது.

கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் நிகழ்வில் அரசியல் கூட்டணி அமைக்கும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், புதிய ஜனநாயக முன்னணி பிரசாரத்தில் இணைந்துக்கொண்டுள்ள கட்சிகளும், சிவில் சமூக குழுக்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன” என, அமைச்சர் மனோ கணேசன்  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .