Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர், அமைச்சரவையை முழுமையாக மாற்றியமைக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மாத்திரம் பங்கேற்ற அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காமை இன்றைய கூட்டத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென அமைச்சர் தயாக கமகே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த விடயம் நேற்றைய தினம் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago