Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2017 ஜூலை 01 , மு.ப. 01:40 - 1 - {{hitsCtrl.values.hits}}
“நான் சுவிஸ் நாட்டில் இருந்தேன். அங்குள்ள மாபியா குழு ஒன்று, தெற்காசிய நாடுகளிலுள்ள இளம் பெண் ஒருவரை, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, படுகொலை செய்வதை, வீடியோவாக எடுத்துத் தருமாறு, என்னுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்” என்று தன்னிடம் சுவிஸ்குமார் தெரிவித்தார் என்று, வித்தியா படுகொலை வழக்கின் ஆராவது சாட்சியமான முஹமட் இப்ரான், “ட்ரயல் அட்பார்” முன்னிலையில், சாட்சியம் அளித்தார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகள், "ட்ரயல் அட்பார்" முறையில் நேற்று, வௌ்ளிக்கிழமை (30), யாழ். நீதிமன்றக் கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில், மூன்றாவது நாளாக இடம்பெற்றது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது, பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையிலான அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில், லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது, பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ஷரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேநேரம் 1ஆம் ,2ஆம் , 3ஆம் , 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகள் சார்பில், சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க ஆகியோரும் 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும், 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால், 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
குறித்த வழக்கின் ஆறாவது சாட்சியும் சுவிஸ்குமாருடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான முஹமட் இப்ரான் என்பவர் சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-
ஹெக் செய்வதில் அனுபவம்
“நான், கணினி மென்பொருள் பொறியியல் துறை சார்ந்தவன். 2014ஆம் ஆண்டு கால பகுதியில், எனது வங்கி அட்டையை, பிறிதொருவருக்கு வழங்கியிருந்தேன். அவர், அந்த அட்டையின் மூலம் பணமோசடியில் ஈடுபட்டிருந்தார். குறித்த வங்கி அட்டைக்குச் சொந்தக்காரன் நான் என்பதால், எனக்கு எதிராக, கொழும்பு கோட்டை நீதிமன்றம், புத்தளம் நீதிமன்றம் மற்றும் வவுனியா நீதிமன்றில் 11 வழக்குகள் உள்ளன. அவையனைத்தும், நிதி மோசடி வழக்குகளே. மொத்தமாக, 13இலட்ச ரூபாய் நிதி மோசடி செய்தேன் என்பதே, என் மீதான வழக்கு ஆகும்.
“எனக்கு, கணினித் துறையில் ஆர்வம் இருந்தமையால், அது சார்ந்தவற்றை நன்கு கற்று இருந்தேன். மொன்பொருட்களைப் பயன்படுத்தியும் நேரடியாகவும், பிறிதொருவரின் கணினியை, என்னால் ஹெக் செய்ய முடியும். அதில் எனக்கு அனுபவம் நிறைய உண்டு.
“அதேபோன்று, அலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை, என்னால் மீள எடுக்க முடியும். அதற்கான மென்பொருள் ஒன்றையும் நான் தயாரித்துள்ளேன்.
சுவிஸ் குமாருடனான சந்திப்பு
“வவுனியா நீதிமன்றில் நடைபெறும் வழக்குத் தவணைக்காக, என்னை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்தார்கள். அந்தக் காலப் பகுதியிலையே, சுவிஸ்குமாரை எனக்குத் தெரியும்.
“வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில், ஒரு நாள், மருத்துவ பரிசோதனைக்காக, மருத்துவர்கள், சிறைச்சாலைக்கு வந்திருந்தார்கள். சிறைச்சாலை அத்தியட்சகரின் அறைக்கு அருகாமையில் இருந்த அறையிலேயே, மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அந்த அறையின் முன் பகுதியில், வித்தியா வழக்குடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம், குற்றபுலனாய்வு துறையினர், வாக்கு மூலம் பதிவு செய்துக்கொண்டு இருந்தனர்.
“சிறைகூடத்திலிருந்து இருந்து, மூன்று மூன்று கைதிகளாகவே, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்படுவார்கள். அப்போது நான், முதலாவதாக மருத்துவ பரிசோதனையை முடித்துக்கொண்டு வெளியில் வந்து, என்னுடன் வந்த மற்றையவர்களின் மருத்துவ பரிசோதனை முடியும் வரை காத்துக்கொண்டு இருந்தேன்.
“அப்போது, வித்தியாவின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களிடம், பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வாவுடன் வந்த ஏனைய குற்ற புலனாய்வு துறையினர், வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொண்டு இருந்தனர். நிஷாந்த சில்வாவும் அவ்விடத்தில் நின்றுக்கொண்டு இருந்தார்.
“அவர் தான், என்னுடைய வழக்கு தொடர்பிலும் விசாரணை செய்தவர். அதனால், நான் ஒரு கணணி மென்பொருள் பொறியியலாளன் என்பது, அவருக்கு தெரியும். அதனால், 'அலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா?' என்று, அவர் (நிஷாந்த சில்வா) என்னிடம் வினவினார். அதற்கு நான், ஆம் என்று கூறினேன். நான் கூறுவதை, அங்கு வாக்குமூலம் கொடுப்பதற்காக வந்திருந்த சுவிஸ்குமார் கேட்டுக்கொண்டு இருந்தார்.
“அதன் பின்னர், 'அலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா?' என்று, சுவிஸ் குமார் என்னிடம் கேட்டார். நானும் 'ஆம்' என்று கூறினேன். அப்போது, 'மென்பொருளை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா?' என்று அவர் மீண்டும் கேட்டார். அதற்கும், 'ஆம். என்னால் முடியும்' என்று கூறினேன்.
“அலைபேசி பாவனை செய்கின்றவர்கள், அதிலுள்ள தரவுகளை அழிப்பது சாதாரணமான விடயம்தான். ஆனால், மென்பொருளொன்றை பயன்படுத்தி அழிப்பது என்றால், அதில் ஏதோ பிரச்சினை இருப்பதை நான் புரிந்துக்கொண்டேன்.
“இது தொடர்பில், சுவிஸ்குமார் என்னுடன் கதைத்த மறுநாளே, நான், மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுவிட்டேன். கொழும்பு கோட்டை நீதிமன்றிலுள்ள வழக்குக்காக, நான் வவுனியா நீதவான் நீதிமன்றத்தால், விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தமையால், 14 நாட்களுக்கு ஒரு முறை, என்னை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், அந்தத் தவணை, எனக்கு கொழும்பில் வழக்கு இருந்தமையால், நான் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. அடுத்த தவணைக்கே என்னை அழைத்து வந்தார்கள்.
அரச சாட்சியாக முயற்சி
“அப்போது என்னைச் சந்தித்த சுவிஸ்குமார், 'ஏன் போன தவணைக்கு அழைத்து வரவில்லை?' என்று கேட்டார். அதற்கு நான், 'கொழும்பில் பிறிதொரு வழக்கு இருந்தமையால், அழைத்து வரவில்லை' என்று கூறினேன். அப்போது, 'வழக்குக்காகத் தான் வரவில்லையா அல்லது குற்றத் தடுப்பு புலனாய்வு துறையினரை சந்திக்க போனீயா?' என்று மீண்டும் கேட்டார். “அவர்களை சந்திச்சுட்டுதான் வாறேன். உங்கள் அலைபேசி பற்றி என்னுடன் கதைத்தார்கள்” என்று சும்மா கூறினேன். 'உன்னை தனியாக சந்திக்க வேண்டும். ஆனால், நான் சந்திப்பது, மற்றைய 8 பேருக்கும் தெரியக்கூடாது' என்று சுவிஸ்குமார் கூறிவிட்டு, மறுநாள் என்னைத் தனியாகச் சந்தித்தார்.
20 மில்லியன் ரூபாய் இலஞ்சம்
“'நிஷாந்த சில்வாவின் பலவீனம் என்ன?' என்று சுவிஸ்குமார் கேட்டார். நான் தெரியாது என்று கூறிவிட்டு, 'உங்களுக்கு அவரிடமிருந்து என்ன வேண்டும்' என்று கேட்டேன். அதற்கு அவர், ' வித்தியா வழக்கில், நாங்கள் மூன்று பேர் சகோதரர்கள். நாம், அரச சாட்சியாக மாற வேண்டும். அதற்கு, நிஷாந்த சில்வாவுடன் கதைப்பதற்கு, ஏற்பாடு செய்து தரவேண்டும்' என்று கூறினார்.
“'அவ்வாறு செய்தால் நிஷாந்த சில்வாவுக்கு என்ன கொடுப்பீர்கள்' என்று நான் கேட்டேன். '20 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்க முடியும்' என்று தெரிவித்தார். இவ்வாறு நாம் பேசிக்கொண்டு இருந்தபோது, சுவிஸ் குமாரை யாரோ சந்திக்க, சிறைச்சாலைக்கு வந்து இருக்கின்றார்கள் என்று தெரிவித்ததும், சுவிஸ் குமார் சென்று விட்டார். மீண்டும் என்னை திரும்பச் சந்தித்த சுவிஸ் குமார், 'மூன்று பேரை அரச சாட்சியாக மாற்ற முடியாது. ஒருவரை தான் மாற்ற முடியும்' என்று தெரிவித்து, எனவே, தன்னை மட்டும் நிஷாந்த சில்வாவுடன் கதைத்து, அரச சாட்சியாக மாற்றி விடும் படி என்னிடம் கேட்டார். 'இந்த தகவல் ஏனைய எட்டு பேருக்கும் தெரிய கூடாது' என்றும் என்னிடம் அவர் கூறினார்.
மாபியா குழுவுடன் ஒப்பந்தம்
“அதற்கடுத்த நாள், என்னை மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்து சென்று விட்டனர். சிறிது காலத்தில், என்னை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்து வந்தபோது, சுவிஸ் குமாரை சந்தித்தேன். 'நிஷாந்த சில்வாவுடன் கதைப்பது என்றால், காரணம் என்னவென்று எனக்குத் தெரியவேண்டும்' என்று நான் கூறினேன்.
“அப்போது சுவிஸ் குமார் கூறுகையில், ' நான் சுவிஸ் நாட்டில் இருந்தேன். அங்குள்ள மாபியா குழு ஒன்று, தெற்காசிய நாட்டு இளம் பெண் ஒருவரை, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதனை, காணொளியாக எடுத்து தருமாறு என்னுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.
'அதனை தொடர்ந்து, நான் இலங்கையிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு அது பற்றி கூறினேன். 20 வயதுக்கு உட்பட்ட பெண் ணொருவர் தேவை என்று கூறினேன். அவர் ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பெண்ணை நான் ஓகே செய்தேன்' என்று சுவிஸ்குமார் கூறினார். நான், 'இலங்கையில், யாரைத் தொடர்பு கொண்டீர்கள்' என்று நான் வினவினேன். அதற்கு, 'இங்கு, எதிரி கூண்டில் ஆறாவது நபராக உள்ளவரை (சிவதேவன் துஷாந்தன் ) சுவிஸ்குமார் எனக்கு காட்டி இருந்தார்.
'இதில், ஆறாவதாக உள்ள நபருடன் சேர்ந்து, இலங்கையிலுள்ள ஏனையவர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்காக, அந்த பெண்ணின் தாயாருடன், பெரிதொரு வழக்கில் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் தம்முடன் கூட்டு சேர்ந்தனர்' என்று சுவிஸ்குமாமர் என்னிடம் கூறினார்.
உயிருக்கு அச்சுறுத்தல்
“பின்னர் மீண்டும் நான் மகசீன் சிறைக்குக் கொண்டு செல்லபட்டேன். அங்கே, நிஷாந்த சில்வாவிடம், சுவிஸ் குமார் சொன்ன விடயங்களை சொன்னேன். அவர் அங்கு வைத்து எனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார்.
“அது எப்படியோ சுவிஸ்குமாருக்கு தெரிந்து விட்டது. நான் மீண்டும் வவுனியா சிறைக்கு வந்த போது, 'குற்ற தடுப்பு புலனாய்வு துறையினருக்கு சொன்ன விடயத்தை நீதிமன்றில் சொல்ல கூடாது. சொன்னால், ஏனைய வழக்குகளுக்கு போய் வரும் வேளைகளில், உனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். உன் மனைவிக்கும், வித்தியாவுக்கு நடந்தது போன்றே நடக்கும்' என்று சுவிஸ்குமார் என்னை மிரட்டினார்.
“இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் மகசீன் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் புத்தளம் நீதிமன்றிலும் தெரியபப்டுத்தினேன்.
கூகிள் ட்ரைவ்
“வித்தியாவை வன்புணர்வு செய்வதை எடுத்த காணொளியை அலைபேசியினூடாக அனுப்பியுள்ளார்கள். கூகிள் டிரைவ் மூலமே அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 'வித்தியாவை வன்புணர்வு செய்த நேரத்தில் நான் அங்கு இருந்து இருந்தால், நான் தான் முதலில் வன்புணர்ந்து இருப்பேன். அவரின் உடலை பார்க்கும் போது ஆசையாக இருக்கின்றது' என்றும் என்னிடம் சுவிஸ்குமார் தெரிவித்தார்.
“'நான், யாழ்ப்பணத்தில் இருந்து, அரசியல் வாதியின் தம்மியொருவரின் உதவியுடனே, கொழும்புக்கு தப்பி வந்தேன். அரசியல் வாதியின் தம்பியே, வாகன ஒழுங்குகளைச் செய்திருந்தார். அதனூடாக, பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் துணையுடன், யாழ்ப்பணத்தில் இருந்து, கொழும்புக்கு தப்பி வந்து, வெள்ளவத்தையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு நபருடன் தங்கியிருந்தபோதே, என்னை, வௌ்ளவத்தை பொலிஸார் கைது செய்தனர்' என்று சுவிஸ்குமார் என்னிடம் தெரிவித்தார்.
“ஒருநாள், 'இந்த வழக்கில் உள்ள அண்ணன் தம்பிகள் மூவரும், இந்த வழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை போன்று உள்ளதே' என்று நான், சுவிஸ் குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'ஆம் அதில் இருவரே சம்பந்தப்பட்டவர்கள். மற்றைய ஒருவருக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இல்லை' என்று கூறினார். ஆனால் அது யார் என்று சொல்லவில்லை” என்று அவர் தன்னுடைய சாட்சியத்தை தெரிவித்தார்.
சாட்சியத்திடம் விசாரணை
அதனைத் தொடர்ந்து, எதிரி தரப்பு சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணையின் போது, சாட்சியத்திடம், 'இந்த வழக்கின் எதிரிகளை சிறைச்சாலையில் , சித்திரவதைக்கு உட்படுத்தியதை நீர் கண்டீரா' என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள் மூவரும், 'எதிரிகள் தம்மை சித்திரவதை செய்தனர் என எங்கும் முறைப்பாடு செய்யவில்லை. எனவே, அந்தக் கேள்வியை நிராகரிக்கின்றோம்' என்று அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சாட்சியத்திடம் 'உமக்கு நிதி தேவைப்பட்டுள்ளது. அதனால், நிஷாந்த சில்வாவைத் தெரியும் என்று எதிரிகளுக்கு கூறி, அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்டீர் என கூறுகிறேன்' என்று, எதிரி தரப்பு சட்டத்தரணி கூறினார். அதற்கு சாட்சியம், 'அவ்வாறு இல்லை' என பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, எதிரி தரப்பு சட்டத்தரணி சி.கேதீஸ்வரன், 'இந்த எதிரிகளுடன் பணம் கேட்டு முரண்பட்டுள்ளீர். அது தொடர்பில் நீதிமன்றின் கவனத்துக்கு எதிரிகள் கொண்டு வந்துவிடுவார்களோ எனும் பயத்தின் காரணமாக, இவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்கின்றீர்' என்று சாட்சியத்திடம் கூறினார். அதற்கு சாட்சி, 'அவ்வாறு இல்லை' என்று பதிலளித்தார். அதையடுத்து, 6ஆவது சாட்சியத்தின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டது.
விசாரணை ஒத்திவைப்பு
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரையில் எதிரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.
thanojan Tuesday, 15 August 2017 02:44 PM
இந்தக் காணொளி பதிவேற்றம்.செய்யிரதால எமக்கு எந்த பயனுமல்ல. அவங்கலுக்கான தண்டனை கிடைக்கனும்..... இந்த காணொளியை பதிவேற்றம் செய்யிறதால .அவங்கட குடும்பத்துக்குதான் அசிங்கம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago