2025 மே 14, புதன்கிழமை

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவுக்கு குழு நியமனம்

Editorial   / 2019 டிசெம்பர் 09 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாசவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

குழுவின் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சியின் விதிகளை மீறிய உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X