2025 மே 15, வியாழக்கிழமை

பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு; முழு விவரம்

Editorial   / 2020 மார்ச் 23 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (24)  காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

அத்துடன், பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் ஊடரங்கு அமுல்படுத்தப்படும்.

அத்துடன், குறித்த பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 6 மணிவரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஏனைய பிரதேசங்களுக்கு இன்று காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், அப்பகுதிகளில் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .