Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இசெட்.ஷாஜஹான்
கொழும்பு துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு மணல் அகழ்ந்தெடுக்கப்படுவதற்கு எதிராக துண்டுப் பிரசுர விநியோகமும் கையெழுத்து பெறும் நடவடிக்கையும், நீர்கொழும்பு பிட்டிபனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.
முழு நாட்டையும் அழிக்கும் “போர்சிட்டி வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் அங்கு துண்டுப் பிரசுர விநியோகிக்கப்பட்டது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நீர்கொழும்பு நகர சபை முன்றலில் போர்ட் சிட்டிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சாகும் வரை உண்ணாவிரத் போராட்டமானது, மீனவர்கள் மற்றும் அதிகாரிகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக கைவிடப்பட்டது எனவும், போர்சிட்டிக்கான மணல் அகழ்வு கரையோரத்திலிருந்து 10 கிலோ மீற்றருக்கு அப்பால் இடம்பெறும் என அப்போது இணக்கப்ப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும், தற்போது கரையோரத்திற்கு அருகிலேயே, மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் தற்போது கடலறிப்பானது மிக வேகமாக ஏற்பட்டு வருவதாகவும், பசியவத்தை பிரதேசத்துக்கு அப்பால் கடற்கரை வீதியை அண்மித்த பிரதேசங்கள், தலாஹேன பேருவ கரையோர பிரதேசங்களும் மிக வேகமாக கடலறிப்புக்கு உள்ளாகியுள்ளதை வரைபடங்கள் காட்டுவதாகவும் அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, போர்ட் சிட்டிக்கு எதிரான மக்கள் இயக்க முக்கியஸ்த்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த மாதம் 31ஆம் திகதி இந்த விடயம் தொடர்பாக மக்களை விழிப்பூட்டும் வேலைத்தட்டம் ஆரம்பமானது. ஒரு இலட்சம் கையெழுத்து பெறும் வேலையும் நடைபெறுகிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago