Freelancer / 2024 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கடூழிய சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2010ம் ஆண்டு அவர் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில், வெளிநாடொன்றினால் அமைச்சு அலுவல்களுக்காக வழங்கப்பட்ட வாகனத்தை அவர் தனிப்பட்ட வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்த தீர்ப்பை அறிவித்தார்.
அத்துடன் இந்த வழக்கில் அவருக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதன் பின்னர், ஏ.எச்.எம். பௌசி பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. R
47 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago