2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

மண்சரிவுகளில் சிக்கி நால்வர் மரணம் : 9 பேர் மாயம்

Freelancer   / 2025 நவம்பர் 27 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 9  பேர் காணாமல் போயுள்ளனர் என்று பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். 

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் நேற்று ஆறு (6) இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளன.

மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X