2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மலையகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மு.இராமச்சந்திரன், சிவாணிஸ்ரீ, எஸ்.கணேசன், எஸ்.சுரேன், பி.கேதீஸ்)

மலையத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மேல்கொத்மலை மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று (15) திறந்துவிடப்பட்டுள்ளன.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், கெனியன் நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் நோட்டன், விமல சுரேந்திர, மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X