Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கோருமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, கோரிக்கை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அக்கடித்தை அனுப்பிவைத்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில், சட்டரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதால், அதனைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கே மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மேற்படி விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதியால் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படமுடியும். அதனால்தான், அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளேன்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிலைமையை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதியிடம், அக்கடிதத்தின் ஊடாக கோரப்பட்டுள்ளது. அதற்கான இயலுமையும் உள்ளதென மஹிந்த தேசப்பிரிய அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
57 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago