2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மாத்தறை இரட்டைக் கொலை; சடலங்களுடன் இரவைக் கழித்த பிள்ளைகள்

Editorial   / 2017 நவம்பர் 26 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவிமன வடக்கு, துன்போதிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில், படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று (26) பிற்பகல் 2.30 மணியளவில், இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் குடியிருக்கும் பாலித்த அபேவர்தன என்பவரின் தாயும் மனைவியுமே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட பெண், இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன், படுகொலை செய்யப்படும் போதும் அவர் கர்ப்பம் தரித்திருந்ததாகவும் அவரது வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் வளர்ந்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரான பாலித்த அபேவர்தன, வீட்டுக்கு வந்து பார்த்ததை அடுத்தே, தனது மனைவியும் தாயும் கொல்லப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

நேற்றிரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தப் படுகொலையை அடுத்து, 5 மற்றும் ஒன்றரை வயதுகளையுடைய இரு பிள்ளைகளும், இன்று பிற்பகல் தமது தந்தை வீடு திரும்பும் வரையில், சடலங்களுடனேயே இருந்துள்ளன என்றும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மாத்தறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .