2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

மின் கட்டணத்தை 20% குறைக்க பரிந்துரை

Editorial   / 2024 மே 06 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சார சபையில் கடந்த மூன்று மாதங்களில் ரூ. 8,200 கோடி இலாபம் ஈட்டியதால், பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்காக துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழுவானது மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது.

மேலும், மின்சார சபைக்கு கிடைத்த இலாபத்தைக் கருத்திற்கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மின்சார சபை என்பன உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுவின் தலைவர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மக்களின் பொருளாதாரச் சிரமங்களை ஓரளவு குறைக்க முடியும் எனவும்   கடந்த வருடம் மின்சார சபையின் திரட்சியான இலாபம் 6,000 கோடி ரூபாய் எனவும் 2024 ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் பெறப்பட்ட 5,100 கோடி ரூபாவையும் சேர்த்து 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை 8,200 கோடி ரூபா இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாக குழு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X