2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மிளகாய்த் தூள் வீசி 15 மில்லியன் ரூபாய் கொள்ளை

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 02 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளி வீதி, பிளெக்பூல் பகுதியில் அமைந்துள்ள சிகரெட் விற்பனை முகவர் நிலையத்தின் 15 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று (2) காலை 8.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 குறித்த சிகரெட் விற்பனை முகவர் நிலையத்திலிருந்து தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட கொண்டு செல்லப்பட்ட 1,45,0000 இலட்ச ரூபாய் பணத்தை முச்சக்கர வண்டியில் வந்த மூவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணத்தை கொண்டு சென்ற லொறியை பார்க் வீதி, டுவர்இன் ஹொட்டலுக்கு அருகில்  வழிமறித்த மூவர் லொறியின் கண்ணாடியை உடைத்து  சாரதி மற்றும் பணத்தைக் கொண்டு சென்ற நபர் மீது மிளகாய்த் தூளினை வீசி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

அத்துடன், குறித்த கொள்ளையர்களால் 37,00000 ரூபாய் காசோலையும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், இவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X