2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் களமிறங்கும் சஜித்?

Editorial   / 2019 டிசெம்பர் 04 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நாளை (05) மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு 2இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்துக்கு சஜித் பிரேமதாச, இன்று (04) விஜயம் செய்து தனக்கு நெருக்கமானவர்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நாளை (05)முதல்,  நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் சமய வழிபாடுகளில் கலந்துகொள்வதுடன், மக்களை சந்திக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X