Editorial / 2021 ஜனவரி 06 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
கொவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசியைத் தயாரித்ததன் பின்னர், அந்தத் தடுப்பூசியை சாதாரணமாக நாடுகளுக்கிடையே விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்காக, அரசாங்கமும் தடுப்பூசியைத் தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் 'கொவெக்ஸ்' வசதியின் கீழ், ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் நேற்று (05) நடைபெற்றது. இதன்போது, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் தடுப்பூசி வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக, இரண்டு கட்டங்களின் கீழ், தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை அனுப்புமாறு அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், அதற்கமைய, இலங்கை டிசெம்பர் 7ஆம் திகதி முதலாவது மற்றும் A பிரிவை பூரணப்படுத்தியுள்ளது. இதன் இரண்டாவது கட்டமாக, தடுப்பூசியைப் பெறுதல் மற்றும் அது தொடர்பான இழப்பீட்டு ஒப்பந்தத்துக்கு இந்த மாதம் 8ஆம் திகதி விண்ணப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டுள்து.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, 'கொவெக்ஸ்'க்கான தடுப்பூசி விண்ணப்பத்தின் டீ பிரிவை முன்வைக்கவும் அந்த வசதியின் கீழ், தடுப்பூசி ஒதுக்கப்படும் சந்தர்ப்பத்தில், குறித்த உற்பத்தியாளருடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தடுப்பூசியை இலங்கையர்களுக்குப் பெற்றுக்கொடுக்கக் கூடிய காலம் தொடர்பில், உறுதியான அறிவிப்பொன்றைத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சின் போது, தெரிவித்த ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க, எதிர்வரும் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், இலங்கையர்களுக்குத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கான கலந்துரையாடல் தற்போது நிறைவுறும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர்,எதிர்வரும் நாள்களில் சரியான பதிலைக் கூறமுடியும் என்றார். பெப்ரவரி மாதத்தின் இறுதியிலோ, மார்ச் முதல் வாரத்திலோ தடுப்பூசியைப் பெறமுடியும், தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உறுதியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
முதலில் இந்தத் தடுப்பூசி, சுகாதார சேவை பணியாளர்களுக்கே வழங்கப்படும். தற்போது 1,55,000 பணியாளர்கள் உள்ளனர். எனவே, இவர்களுக்கு வழங்குமாறே உலக சுகாதார ஸ்தாபனமும் பரிந்துரைக்கின்றது என்றார். இரண்டாவதாக முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் இந்தத் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும். இவ்வாறு இவர்களில் 1,27,500 பேர் இருக்கின்றனர் என்றார்.
11 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago