2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மேலும் 42 கிராம சேவகர் பிரிவுகளை முடக்க தீர்மானம்

J.A. George   / 2021 மே 14 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 கிராம சேவகர் பிரிவுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 12 கிராம சேவகர் பிரிவுகளும், குருநாகல் மாவட்டத்தில் 24 கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X