2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாக்குச்சீட்டை படம் பிடித்தால் 7 வருடங்கள் தடை

Freelancer   / 2022 ஜூலை 19 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை(20) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இரகசிய வாக்கெடுப்பு என்பதால் வாக்கு சீட்டுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் படம் பிடிக்கக்கூடாது என சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டம் இன்று(19) நடைபெற்றபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது வாக்கு சீட்டை படம் பிடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்றத்துக்கு வருவதற்கு ஏழு வருடங்கள் தடை அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான சட்டங்கள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X