2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் மூவர் உயிரிழப்பு; எட்டு பேர் படுகாயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் ஆறாவது மைல்கல் அருகில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமுக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டுபேர் படுகாயமடைந்துள்ளனர்.

வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி இந்த விபத்து இன்று (24) இடம்பெற்றுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மடு திருத்தலத்துக்கு சென்று திரும்பிய களுத்துறை பகுதியை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 வயது குழந்தையும்  உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .