2025 மே 17, சனிக்கிழமை

வைத்தியர் ஷாபிக்கு எதிராக குருநாகலில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மே 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்​னெடுக்கப்பட்டுள்ளது.

பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் குருநாகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியரர் தொடர்பில் விசாரணைகளை  முன்னெடுக்கும் வைத்தியர் சரத் வீரபண்டாரவை இடமாற்றம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் முயற்சிப்பதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனவே வைத்தியருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அரசியல் தலையீடு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .