2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல்

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரணை, திகம்பதஹ, ஹிரிவடுன்ன வனப்பகுதியில் நேற்று மாலை வரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4 பெண் யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் காலை கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, மேலும் 3 பெண் யானைகளின் உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

பெண் யானைகள் மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியாது என வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

யானைகளின் உடற்பாகங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X