2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டம்...

Kogilavani   / 2016 நவம்பர் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஹட்டன் - போடைஸ் தோட்டத்தின் 3 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், இன்று  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட நிர்வாகத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள நவீன முறையிலான தராசு, கொழுந்து நிறுவையை முறையாகக் காட்டுவதில்லை, தோட்ட விடயங்கள் தொடர்பிலும், நிர்வாகம் கடந்த இரண்டு வருடங்களாக அக்கறையின்றி செயற்படுகின்றது போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி, குறித்த தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த 5 நாட்களாக, பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்றைய தினம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில், தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தொழிலாளர் தேசிய சங்க உபதலைவரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான எம்.நகுலேஷ்வரன், சங்கத்தின் பொது செயலாளர் பிலிப் மற்றும் இலங்கை தொழிலாளர் சங்கத்தின் உப-தலைவரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான கு.ராஜேந்திரன் ஆகியோர், ஸ்தலத்துக்கு வருகை தந்திருந்ததுடன், தோட்ட அதிகாரியிடமும் கலந்துரையாடல்களை ​மேற்கொண்டனர்.

இதன்போது, தராசு விடயத்துக்கு, விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகக் கூறிய தோட்ட அதிகாரி, தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினை தீர்ப்பதற்கு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டுமெனவும் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X