2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

14 மாடுகள் உயிருடன் மீட்பு

Kogilavani   / 2016 நவம்பர் 08 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஹஸலக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், லொறியொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்ட 14 மாடுகளை, பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளதுடன், தப்பி ஓடிய லொறிசாரதி உட்பட இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹஸலக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட லொறியை பொலிஸார் வழிமறித்த போதிலும், லொறியில் பயணித்தவர்கள் லொறியை நிறுத்தாது சென்றுள்ளனர்.

இவர்களை பின்தொடர்ந்த பொலிஸார், மஹியங்கனை - கண்டி வீதியில் வேரகங்தொட்டைப் பிரதேசத்தில் வைத்து லொறியின் சில்லுகளுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், லொறியின் சாரதியும் உதவியாளரும் லொறியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .