Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஜூன் 14 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் சிரேஷ்ட சட்டத்தரணி நவின் திசாநாயக்க மற்றும் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் கலாநிதி எஸ். அதிரா . ஆகியோர் தலைமையில் கேகாலை நகரசபை உள்ளக விளையாட்டரங்கில் வியாழக்கிழமை(13) இடம்பெற்றது.
இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி நவீன் திஸாநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவியேற்று ஜூன் 13ஆம் திகதியுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலைகளுக்கான கணினி மற்றும் உபகரணங்கள், இசைக்கருவிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இந்திய அரசின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்றல் தொடர்பான புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிவா ஸ்ரீதரராவ்
கிழக்கு மாகாணத்தில்....
இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில்10 ஆவது சர்வதேச யோகா தினம் திருகோணமலை மெக்கேயர் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (14) காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றதுடன், யாழ்ப்பாண இந்திய உயர் ஸ்தானிகர் சாய் முரளி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் 2500க்கும் மேற்பட்ட யோகாசனம் பயிலும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
அ.அச்சுதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
5 hours ago
9 hours ago