Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மலையகத்தின் தந்தை' என போற்றப்படுகின்ற பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உட்பட கட்சி பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் இதன்போது கலந்துக் கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025